காதலின் மீதியோ நீ-23
காதலின் மீதியோ நீ-23
ஆயுஷ் நித்ரா தன்னிடமிருந்து விவாகரத்துக் கேட்கிறாள் என்றதும் அதை நம்ப முடியாது “நீ நித்துமா உண்மையாகவே நீ விவாகரத்து கேக்குறியா? ஏன் அதுதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிட்டே? உன்னோடுதான் நான்…நான் வாழ விரும்புறேன். நீ இல்லாம நான் வாழ்க்கையை தொலைத்து விட்டுத்தானே நிற்பேன். எனக்கு எல்லாமே நீ தானே!” என்று அவள் மீது உள்ள அதிகமான காதலை உணர்ந்து அவளிடம் கேட்டான்.
நித்ராவோ கசந்த புன்னகை உதிர்த்தவள் “எல்லாப் பிரச்சனை தீர்ந்துட்டுன்னு உங்களால் எப்படி சொல்ல முடியுது? பிரச்சனை தீரவே இல்லை. பிரச்சனை நீங்க யாராலன்னு கண்டுபிடிச்சிருக்கீங்க அவ்வளவுதான்.அது தவிர பிரச்சனையை தீர்க்கவெல்லாம் இல்ல. முழு பிரச்சனையான உங்க அப்பாகிட்ட நீங்க தப்பிக்கவே முடியாது”
“என்ன சொல்லுற நித்துமா? அவர்தான் அமைதியாகிட்டாரே”
இல்ல அவர் அமைதியாக இருந்தாலும் அவருடைய உள்ளான எண்ணங்கள் அமைதியாக இருக்க விடாது. என்றைக்கு ஒரு பச்சைக் குழந்தையின் கழுத்துல அவ்ளோ பெரிய கத்தியை வைச்சு கொன்றுவேன் மிரட்டி என் காதலை உங்ககிட்ட இருந்து பிரிச்சாரோ அப்பவே எனக்கு தெரியும் அவரெல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாதுன்னு. தனக்காக ஒன்னு செய்யணும்னா எந்த நிலைக்கும் இறங்கிப்போவார். எதைப்பத்தியும் யாரைப்பத்தியும் கவலையே படமாட்டார்.இறங்கி செய்வார்.இப்படிப்பட்ட ஒருத்தர் இருக்கும் வீட்டில் நான் இந்த மூன்று மாதம் இருந்ததே பெரிய விஷயம்”
“அது இல்லமா அவர் புரிஞ்சுப்பார் நான் பேசியிருக்கேன்ல என்னோட வாழ்க்கைக்காக அவர் இறங்கி வருவார். நீ பயப்படாத எது வந்தாலும் நான் கூட இருக்கேன்”ல என்று அவனது கையை பிடித்து சமாதானப்படுத்தி பேசினான்.
“நான் எப்படி இந்த வீட்ல வாழ முடியும் ஆயுஷ் ஒரு மருமகளா மகனோடு வாழக்கூடாது வாழ்ந்தால் கர்ப்பமாகிடுவேன் அந்த வாரிசு இந்த வீட்டுக்கு வரக்கூடாது சொன்னவர் இந்த வீட்டில் இருக்கும்போது நான் எப்படி வாழ்வேன்? இந்த மூன்று மாதமும் என் வயிற்றை மறைப்பதற்கும் நான் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்கும் எவ்வளவு பாடுபட்டேன், எவ்வளவு பயந்தேன் தெரியுமா? உங்க அப்பா முன்னாடி நடக்கிறதுக்கும் மூச்சு விடறதுக்குக்கூட நான் பயந்தேன் .என்னை கொன்றுவாரோன்னு பயந்தேன் என் குழந்தையைக் கொன்றுவாரோன்னும் பயந்தேன். அதைவிட நீங்க கொடுத்த டார்ச்சர் எல்லாம் தாங்கிக்கொண்டு வாழ்ந்தேன் .இதுக்கு மேல இந்த வீட்ல இருக்க மாட்டேன்.உங்களோட வாழ மாட்டேன்.அப்படியே நான் உங்களோட வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை உங்களுக்கு நிம்மதியாக இருக்காது.உங்கள் சந்தோஷத்தை கெடுக்கும். வேண்டாம் நம்ம பிரிஞ்சிடுவோம். நான் தெளிவாக முடிவு எடுத்துட்டேன். எனக்கு என் குழந்தை எனக்குப் போதும்” என்று தனது வயிற்மில் கையை வைத்து சொன்னவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.
ஆயுஷ் அவளிடம் மீண்டும் பேசமுயன்றான்.ஆனால் அவளோ அவனோடு பேசாது மௌனம் சாதித்தாள்.
ஆயுஷுக்கு வேறு வழி தெரியாது மோகனுக்குப் போன் பண்ணி நடந்த விசயம் அனைத்தையும் சொன்னவன் தயவு செய்து நித்ராவை வந்தக்கூட்டிட்டுப் போகமுடியுமா? என்று கேட்டான்
மோகனுக்கும் மித்ராவுக்கும் நடந்ததெல்லாம் கேட்டதும் அப்படியே ஈரக்குலையே நடுங்கி விட்டது.
தனது தங்கையை கடத்தி மிரட்டி இருக்கிறார் .தனது குழந்தை காணாமல் போனதுக்கும் அவர்தான் காரணம் நம்ம குடும்பத்திற்காக தனது காதலையே தியாகம் செய்துவிட்டு நிற்பவளை மீண்டும் அங்கயே துரத்தி அனுப்பி இருக்கிறோமே! என்று வருத்தப்பட்டார்கள்.
இரண்டு பெரியவர்களிடமும் எதுவும் சொல்லாது குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு அருணை அழைத்துக்கொண்டு மோகன் மித்ரவோடு வந்து சேர்ந்தனர்.
அவர்களை வீட்டிற்கு அழைத்துவர எல்லா ஏற்பாட்டையும் ஆயுஷே செய்திருந்தான்.
குப்தாவிற்கு இப்போது மகனோடு பேசமுடியவில்லை என்கின்ற ஆத்திரமும் கோபமும் இப்போதும் நித்ரா மீதுதான் திரும்பியது.
அதையும் வெளிப்படுத்த முடியாது மனைவியிடம் காண்பித்தார்.பூர்வியோ அமைதியாக எல்லாவற்றையும் அந்தக் குடும்பத்திற்காகத் தாங்கிக்கொண்டார்.
மோகனம் அருணும் உள்ளே வரும்போது குப்தாமேல் கொலைவெறியில்தான் வந்தனர். ஆயுஷ் என்ற ஒரு மனுஷனுக்காக பொறுமையாக வந்து அமர்ந்திருந்தனர்.
அந்த வீட்டில் பச்சத் தண்ணிக்கூட குடிக்க கூடாது நித்ராவை எப்போதுடா அழைத்துப் போவோம் எனக் காத்திருந்தனர்.
அதைப்பார்த்து ஆயுஷிற்குத்தான் கஷ்டமாக இருந்தது.மோகனையும் மித்ராவையும் பார்த்து பிரீத்தா புன்னைகைத்தாவள் “குட்டீஸ் எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தவள் மித்ராவின் கையைப்பிடித்துக்கொண்டாள்.
“சாரி எங்கப்பா செய்ததற்காக நாங்க இரண்டுபேரும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறோம் .சத்தியமா இதை நாங்க எதிர்பார்க்கல.காதலை பிரிக்க ஏதாவது செய்திருப்பாருன்னு நினைச்சோம்.ஆனால் இந்தளவு வரைக்கும் போவாருன்னு சத்தியமா நாங்க நினைச்சதில்ல. இது எங்களுக்கு அதிர்ச்சிதான் கஷ்டமா இருக்கும் சாரி “என்று விட்டு பிரீத்தா அதற்கு மேலாக அங்கிருக்காது போய்விட்டாள்.
நித்ரா இப்போது கல்யாணத்துக்கு கட்டியிருந்த அதே பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு வந்தாள். அதைப் பார்த்தும் ஆயுஷிற்கு மொத்தமும் முடிஞ்சு போச்சு என்று புரிந்துவிட்டது.
அதற்குமேல் நித்ராவிடம் பேசினாலும் பயனில்லை என்று புரிந்துக்கொண்டான்தான். ஆனாலும் அவளைப் பிரிய முடியாது அவளது கைவிரல்களோடு தனது, கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.
மோகனுக்கும் மித்ராவுக்கும் அவனைப் பார்த்து வருத்தமாக இருந்தது. எவ்வளவு பெரிய அந்தஸ்த்துல உள்ள மனுஷன் தனது மனைவிக்காக எவ்வளவு தூரம் இறங்கி நிக்கிறான்.
அவனது காதல் கிடைக்க நித்ரா குடுத்து வைத்திருக்கணும். ஆனால் அவனோடான வாழ்க்கை தான் கிடைக்காமல் போயிருச்சு .இதுதான் கடவுள் எழுதிய விதியோ? என்று வருந்தினர்.
அதற்குமேல் அங்கே நிற்முடியாது.பிளைட்டுக்கும் நேராமவாதல் கிளம்பினார்கள்.
ஆயுஷும் நித்ராவும் அவனது தனி காரில் வந்தார்கள் ஏர்போர்ட் வந்து இறங்கினர். நித்ராவைப் பிடித்து தனது கைவளைவில் வைத்தவன் அப்படியே நின்றிருந்தான் அவனால் யாருடைய முகத்தையும் பார்க்க முடியவில்லை.
நித்ராவின் கண்களைப் பார்த்தவன்”உன்னால் நான் இல்லாமல் இருக்கமுடியும் அப்படித்தான” என்று கேட்டவனுக்குக் கண்கள் கலங்கியது.
அவளது நெஞ்சில் கைவைத்து “நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாதுடி” என்று கையால் சைகை செய்தவனால் பேசமுடியவில்லை, வார்த்தைத் தொண்டைக்குழியில் இருந்து வெளியே வரவில்லை.
அவளது வயிற்றைத் தொட்டுப்பார்த்தவன் மூணு மாசம் கூடயிருந்தும் இதைக்கூட என்னால் கண்டுப்பிடிக்க முடியலையே! நான் எல்லாம் என்ன மனுஷன்?என்று வருந்தினான்.
அவளது வயிற்றில் முத்தம் வைத்தான்.உண்மையில் அவர்களது சம்பாஷனைகளைப் பார்த்துவிட்டு மூவருக்குமே அழுகைதான் வந்தது.
ஏன் கடவுளே உயிருக்குயிராக இருக்கும் இவங்களை பிரிக்கிறீங்க என்று வருந்தினார்கள்.
ஆனால் இது நித்ராவுடைய உறுதியான முடிவு இதில் யாருமே முடிவெடுக்கமுடியாது.
இந்தக் காதலால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது நித்ரா மட்டுமே!
அவளது மனநிலை உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்திற்காக தனது காதலையும் தனது வாழ்க்கையையும் விட்டுக் கொடுத்து இருக்கிறாள். அவள் பட்ட வேதனையும் வலியும் அவளுக்குத்தானே தெரியும்.
அதனால் அவள் என்ன முடிவெடுத்தாலும் ஒன்றுமே சொல்லக்கூடாது என்று முடிவெடுத்திருந்தனர்.அதை ஏற்றுக்கொள்ளவும் தீர்மானித்திருந்தனர்.
அதனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பிருந்ததை தூரத்தில் நின்று கவனித்திருந்தனர்.
இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தாவனோ அவளை வேகமாக இழுத்து கட்டிக் கொண்டான் அவளது முகமெங்கும் முத்தம் கொடுத்தான்.
அவன் கொடுக்கும் ஒவ்வொரு முத்தத்திற்குமாக ஒவ்வொரு சொட்டுக் கண்ணீர் அவளது கண்களில் இருந்து இறங்கியது.
அவளுக்குமே அவனைப் பிரிய முடியாதுதான். ஆனால் அவனோடு வாழவும் முடியாதே என்று உயிரை உருவியெடுக்கும் அந்த பிரிவை அவள் தாங்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
ஏன்டி உன்னைவிட்டு வெறுப்புலக்கூட பிரிய முடியாமல் தானே கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தேன். உன்னை கோபத்தில் வதைத்தாலும் என்னைக்காவது நீயில்லாமல் அந்த அறையில் இருந்திருக்கேனா? உன்னை திட்டிக்கொண்டாவது உன்கூடத்தான் வாழணும்னு வாழ்ந்தனே. என் காதல் உனக்குப் புரியலையா.வா நம்ம வேறே எங்கேயாவது போய் வாழ்வோம். இந்த டெல்லி வேண்டாம்.உலகத்துல அவங்க இல்லாத ஏதோரு மூலைக்குப் போய் வாழலாம்” என்று அவளது கண்களைப் பார்த்துக் கெஞ்சாதக் குறையாக் கேட்டான்.
அவனது கையைப்பிடித்து முத்தம் கொடுத்தவள்”இந்தக் கைகள் என்னை அடிக்கும்போது வதைக்கும்போதும் இந்தக் கைக்குள்தான் அடங்கியிருந்தேன் ஆயுஷ். இந்தக் கைக்குள்தான் என் உலகமே இருக்கு. அத்தனை வேதனையிலும் என்னோடுதானே வாழ்ந்தீங்க. அப்பவே உங்கக் காதல் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ இந்தக் கைக்குள் நான் வாழவேண்டாம். இந்த உலகத்தை பிரிந்துப் போறேன். அதுதான் என் குழந்தைக்காக நான் என் கைக்குள் உருவாக்கும் உலகத்துக்கு நல்லது”
அவள் சொல்ல வருவது அவனுக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது. நான் அவளுக்கு என் கைக்குள் ஒரு காதல் உலகத்தை வைத்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் விட அவள் கைக்குள் அம்மா என்கின்ற அன்பான உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறாள். அதில் எனக்கு இடமில்லை. என் குழந்தைக்கு மட்டுமேயானது” என்பது தெளிவாகப் புரிந்துக்கொண்டான்.
இதற்குமேல் அவளை தன்னோடு வாழு என்று கட்டாயப்படுத்தினால் தன்னை மாதிரி ஒரு சுயநலவாதி இருக்கமுடியாது என்று அந்தப் பிரிவை ஏற்றுக்கொண்டான்.
ப்ளைட்டுக்கு டைமாகிட்டு போர்டிங் போகணும் என்று மோகன் சொல்லவும் திரும்பி நடந்த நித்ராவை வேகமாக இழுத்து அவளது இதழ்களை அத்தனை காதலோடும் ஆவேசத்தோடும் தனது உதட்டால் மூடி தனது காதலால் அவளைத் திக்க முக்காடச் செய்து எல்லோரும் திரும்பிப் பார்த்து வாயில் கைவைக்க முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
அவனது மொத்தக் காதலையும் தனது உயிரையும் அவளுக்கு முத்தமென்ற வழியாக நித்ராவுக்குள் கடத்தியிருந்தான்!